தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வீராம்பட்டினத்தில் கடல் அலையில் சிக்கி பி.டெக்., மாணவர்கள் 2 பேர் மாயம்

வீராம்பட்டினத்தில் கடல் அலையில் சிக்கி பி.டெக்., மாணவர்கள் 2 பேர் மாயம்

வீராம்பட்டினத்தில் கடல் அலையில் சிக்கி பி.டெக்., மாணவர்கள் 2 பேர் மாயம்


ADDED : அக் 28, 2024 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2024 05:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம், : வீராம்பட்டினம் கடலில் குளித்த போது, அலையில், சிக்கி மாயமான பி.டெ., கல்லுாரி மாணவர்கள் இரண்டு பேரை, தீயணைப்பு படையினர் தேடிவருகின்றனர்.

புதுச்சேரி அடுத்த வழுதாவூர் குமரப்பாளையம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகையன் மகன் திவாகர், 20; முத்திரையர்பாளையம் சேரன் நகர், அகத்தியர் தெருவை சேர்ந்தவர் புருேஷாத்தமன் மகன் மோகன்தாஸ், 21; இவர்கள் இருவரும் மதகடிப்பட்டு, மணக்குள விநாயகர் பொறியில், கல்லுாரியில், பி.டெக்., 3ம் ஆண்டு படித்து வந்தனர்.

இரண்டு மாணவர்களும் நேற்று வீட்டில் இருந்து கிளம்பி, அதே கல்லுாரியில், படிக்கும் நண்பர்கள் 9 பேருடன், பைக்கில் அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் ரூபி கடற்கரைக்கு வந்தனர். பைக்குளை கரையில் நிறுத்தி விட்டு, இரண்டு பேரும், சக நண்பர்களுடன் மதியம் 3:00 மணியளவில், கடலில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர்.

அதில், திவாகர், மோகன்தாஸ் இருவரையும், திடீரென கடல் அலை இழுத்து சென்றது. அலையில் இழுத்து சென்ற இரண்டு பேரையும் காப்பாற்ற முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்த அரியாங்குப்பம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அப்பகுதி மீனவர்கள் உதவியுடன், படகு மூலம், தேடினர். ஆனால், இரவு வரை, தேடியும், மாயமான இருவரும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீராம்பட்டினம் ரூபி கடற்கரை அருகே முகத்துவாரத்தை பகுதியில், ஆழப்படுத்தும் பணி நடப்பதால், அந்த இடங்களில் ஆழம் அதிகமாக உள்ளது. சுற்றுலா வருபர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அங்கு வந்து குளிக்கும் போது, அப்பகுதியில் இறங்கி குளிக்க வேண்டாம் என கூறிவருகின்றனர்.

மீறியும் குளிக்கும் போது, கடல் அலையில் சிக்கி பலர் உயிழிந்து வருது குறிப்பிடதக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us