2 லாஸ்பேட்டை தொகுதியில் காங்., வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு
2 லாஸ்பேட்டை தொகுதியில் காங்., வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு
ADDED : மார் 29, 2026 04:27 PM

புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதியில் ஓட்டு சேகரிக்க சென்ற காங்., வேட்பாளர் வைத்தியநாதனை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
லாஸ்பேட்டை தொகுதி காங்., வேட்பாளர் வைத்தியநாதன் தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று, கை சின்னத்திற்கு தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வேட்பாளருக்கு பல இடங்களில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்களின் அன்பால், கூடுதல் நேரம் மக்களுடன் கலந்துரையாடி வருகிறார்.
நேற்று குறிஞ்சி நகர் மற்றும் அப்துல் கலாம் கோளரங்க பகுதிகளில் ஓட்டு சேகரித்தபோது, கடந்த 5 ஆண்டுகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைத்து, தரமான தார் மற்றும் சிமென்ட் சாலைகளாக மாற்றியது. ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தது குற்றச் சம்பவங்களை தவிர்க்க முக்கிய சந்திப்புகளில் 'மினிமாஸ்' மின்விளக்குகள் அமைத்தது. ரூ.9 லட்சம் செலவில் குறிஞ்சி நகர் மற்றும் ராஜிவ் காந்தி பூங்காக்களை புனரமைத்தது உள்ளிட்ட தனது மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்ட அவர், மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற எப்போதும் தயாராக உள்ளதாக உறுதியளித்தார். மேலும், லாஸ்பேட்டை தொகுதி தொடர்ந்து அமைதி பூங்காவாத திகழ ஆதரவு கோரினார்.
