காஞ்சி மாமுனிவர் ஆராய்ச்சி நிறுவனத்தில் தேசிய அளவில் 2 நாள் பயிற்சி பட்டறை
காஞ்சி மாமுனிவர் ஆராய்ச்சி நிறுவனத்தில் தேசிய அளவில் 2 நாள் பயிற்சி பட்டறை
ADDED : மார் 11, 2026 04:53 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவர் அரசு முதுநிலை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன கல்லுாரியின் புள்ளியியல் துறை சார்பில், தேசிய அளவிலான பயிற்சி பட்டறை இரண்டு நாள் நடந்தது.
முதுநிலை இரண்டாமாண்டு மாணவர் சூரியன் வரவேற்றார். புள்ளியியல் துறை தலைவர் ஆனந்தராஜ் நிகழ்ச்சியின் கருப்பொருளை அறிமுகப்படுத்தினார். கல்லுாரி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநர் அழகய்யா, ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கல்லுாரி இயக்குநர் சசிகாந்த தாஸ் தலைமை தாங்கினார். வி.சி.ஆர்.சி., புதுச்சேரி நிறுவனத்தின் விஞ்ஞானி அமலா சிறப்புரையாற்றினார். இரண்டு நாள் நடைபெற்ற இந்த பட்டறையில் பல்வேறு தொழில்நுட்ப அமர்வுகள் இடம்பெற்றன. முதல் நாளில் அமோஸ், எஸ்.பி.எஸ்.எஸ்., மென்பொருட்களை பயன்படுத்தி தரவு பகுப்பாய்வு செய்வது குறித்து மணிகண்டன், மதியழகன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
இரண்டாம் நாளில் கடலுார் பெரியார் அரசு கல்லுாரி புள்ளியல் துறை தலைவர் சுசி கணேஸ்குமார், ஜிப்மர் முதுநிலை மருத்துவ கல்வி ஆராய்ச்சி டாக்டர்கள் விசயரகுநாதன், வடிவேல் ஆகியோர் புள்ளியியல் மென்பொருட்கள் மற்றும் மருத்துவ புள்ளியியல் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து பயிற்சி வழங்கினர்.
பட்டறையில் பல கல்லுாரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிலிருந்து மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். புள்ளியியல் துறை மாணவர் ராகுல்ராஜ் நன்றி கூறினார்.
