/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெளிமாநிலத்தவர் 2 பேர் போலீசில் ஒப்படைப்பு
/
வெளிமாநிலத்தவர் 2 பேர் போலீசில் ஒப்படைப்பு
ADDED : மார் 04, 2024 06:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : குமரகுருபள்ளத்தில் சுற்றித்திரிந்த வெளிமாநிலத்தை சேர்ந்த 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
புதுச்சேரியில் வெளிமாநிலத்தை சேர்ந்த குழந்தை கடத்தல் கும்பல் ஊடுருவி இருப்பதாக புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில வதந்தி பரவியது.
இதற்கிடையே நேற்றிரவு குமரகுருபள்ளத்தில் 2 வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் சுற்றி வந்துள்ளனர்.
இதனால் அவர்கள் மீது சந்தேகமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவர்களை பிடித்து பெரியகடை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் குமரகுருபள்ளத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

