/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நாட்டு துப்பாக்கியுடன் 2 நரிக்குறவர்கள் கைது
/
நாட்டு துப்பாக்கியுடன் 2 நரிக்குறவர்கள் கைது
ADDED : ஜன 29, 2024 08:18 AM

மரக்காணம் : மரக்காணம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் நேற்று மாலை திண்டிவனம் - மரக்காணம் சாலையில், கோபாலபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக பைக்கில் நாட்டு துப்பாக்கிகளுடன் வந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்தது தெரியவந்தது.
அவர்கள், செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அடுத்த செய்யூர் நரிக்குறவர் காலனி ரமேஷ் மகன் விக்ரமன், 23; திண்டிவனம், நத்தமேடு நரிக்குறவர் காலனி ரவி மகன் பார்த்திபன், 21; என்பதும் தெரிந்தது.
மரக்காணம் போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர். 2 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.