தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பத்திர எழுத்தர் மீது சரமாரி தாக்கு கஞ்சா போதை ஆசாமிகள் 2 பேர் கைது

பத்திர எழுத்தர் மீது சரமாரி தாக்கு கஞ்சா போதை ஆசாமிகள் 2 பேர் கைது

பத்திர எழுத்தர் மீது சரமாரி தாக்கு கஞ்சா போதை ஆசாமிகள் 2 பேர் கைது


ADDED : அக் 08, 2024 03:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2024 03:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முத்தியால்பேட்டையில் பத்திர எழுத்தரை, கஞ்சா போதையில் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனுார் அடுத்த சேந்தநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் சுபாஷ்சந்திரபோஸ், 24; வில்லியனுாரில் பத்திர எழுத்தராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு முத்தியால்பேட்டையில் உள்ள தனது நண்பரை பார்க்க, பைக்கில் சென்றார்.

நண்பரின் வீட்டு முகவரி தெரியாததால், முத்தியால்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எதிரே, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி பின்புறம் உள்ள ரோட்டில் நின்றுகொண்டு நண்பரை மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு முகவரி கேட்டுள்ளார். அப்போது, மோட்டார் பைக்கை நிறுத்தாததால், பைக் வெளிச்சம் காரணமாக அங்கு, கஞ்சா புகைத்துக்கொண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பல் மீது பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், சுபாஷ் சந்திரபோஸிடம் வந்து, கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், பைக் சாவியை பிடிங்கி சென்றதால், சுபாஷ் சந்திரபோஸ், அவர்களை பின்தொடர்ந்து சென்று சாவியை கேட்டுள்ளார். இதில், கோபமடைந்த அந்த கும்பல், போதையில் சுபாஷ் சந்திரபோசை கடுமையாக தாக்கினர். இதில் முகம் மற்றும் கன்னத்தில் பலத்த காயமடைந்த சுபாஷ் சந்திரபோஸ் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, கஞ்சா போதையில் சுபாஷ் சந்திர போசை தாக்கிய முத்தியால்பேட்டை டி.வி.நகர், செட்டிகுளம் வீதியைச் சேர்ந்த கிஷோர் (எ) கிருஷ்ணகுமார், 27; பிரபா (எ) பிரபாகரன், 28; ஆகியோரை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us