2 லாஸ்பேட்டை என்.ஆர். காங்., வேட்பாளர் சிவக்கொழுந்து தீவிர ஓட்டு சேகரிப்பு
2 லாஸ்பேட்டை என்.ஆர். காங்., வேட்பாளர் சிவக்கொழுந்து தீவிர ஓட்டு சேகரிப்பு
ADDED : மார் 28, 2026 08:13 PM

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு, லாஸ்பேட்டை தேசிய ஜனநாயக கூட்டணியின் என்.ஆர். காங்., வேட்பாளர் சிவக்கொழுந்து நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தொகுதியின் முக்கியப் பகுதிகளான மடுவுபேட், சேதிலால் நகர், சலவையாளர் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று அவர் ஓட்டு சேகரித்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரசாரத்தின் போது மக்கள் மத்தியில் பேசிய வேட்பாளர் சிவக்கொழுந்து, தொகுதி மக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிவித்தார். குறிப்பாக, தொகுதி மக்களின் பாதுகாப்பிற்காக லாஸ்பேட்டை முழுவதும் சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என வாக்குறுதியை அவர் முன்வைத்தார்.
ஓட்டு சேகரிப்பில் ஸ்ரீ சப்தகிரி அறக்கட்டளை பொறுப்பாளர் சப்தகிரி வி.பி.எஸ்., ரமேஷ்குமார், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சியினர், சப்தகிரி அறக்கட்டளை நிர்வாகிகள், என்.ஆர்.காங்., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். ஓட்டு சேகரிப்பின் போது மகளிர் அமைப்பினர் மற்றும் இளைஞர் அணியினர் ஜக்கு சின்னத்திற்கு ஆதரவு கோரி துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
