/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காலாப்பட்டு சிறையில் 2 மொபைல் போன் பறிமுதல்
/
காலாப்பட்டு சிறையில் 2 மொபைல் போன் பறிமுதல்
ADDED : நவ 12, 2024 07:58 AM
இரு கைதிகள் மீது வழக்கு
புதுச்சேரி: காலாப்பட்டு மத்திய சிறையில் மொபைல்போன் வைத்திருந்த இரு கைதிகள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
காலாப்பட்டு மத்திய சிறையில் 250க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். கடந்த 9 ம் தேதி வார்டன் ஷாஜகான் விசாரணை கைதிகள் யார்டில் சோதனையில் ஈடுபட்டார். அப்போது வில்லியனுார் கஞ்சா வழக்கு கைதி மணிகண்டன் (எ) மருமணி அறையில் மொபைல்போன், சார்ஜர் மற்றும் சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த 5ம் தேதி விசாரணை கைதிகள் 2வது யார்டில் நடந்த சோதனையில், அரியாங்குப்பம் போக்சோ வழக்கு கைதி ராஜி (எ) ரமணா அறையில் மொபைல்போன், சார்ஜர், சிம் கார்டு இருந்தது. அப்போது அறையை சோதனை செய்த சிறை வார்டர்களை ஆபாசமாக பேசியதுடன், கீழே தள்ளி பணி செய்ய விடாமல் தடுத்தார்.
இதுகுறித்து வார்டன்கள், காலாப்பட்டு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் நீதிமன்ற அனுமதி பெற்று, விசாரணை கைதிகள் இருவர் மீதும் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

