ADDED : அக் 27, 2024 03:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : குட்கா விற்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
சேதாராப்பட்டு பகுதியில் பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா, பான் மசாலா போன்றவை விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம், அப்பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.
அப்போது, பெட்டிகடைகளில் குட்கா வைத்து விற்பனை செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த செந்தில்குமார், 30; சேதராப்பட்டை சேர்ந்த காமாட்சி, 48, ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 40 கிலோ, குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.