ADDED : மார் 22, 2026 06:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பெட்டிக்கடையில் குட்கா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் சாலை, வெங்கடசுப்பா ரெட்டி சதுக்கம் அருகில் உள்ள பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.
கடையில் பதுக்கி வைத்திருந்த குட்கா பாக்கெட்டுகளை போலீசார் கண்டுப்பிடித்தனர். கடை உரிமையாளர் உருளையன்பேட்டையை சேர்ந்த வெங்கடேசன், 62; மதுரை திருமங்கலத்தை சேர்ந்த ராஜா, 56; ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 4 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

