ADDED : மார் 14, 2024 05:08 AM

வில்லியனுார், : சேதராப்பட்டு அருகே மகனின் திருமண செலவிற்கு மது பாட்டில் கடத்திய பெண் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
சேதராப்பட்டு போலீசார் நேற்று அதிகாலை மயிலம் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியில் இருந்து மயிலம் நோக்கி பெண் மற்றும் இளைஞர் சென்ற பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர்.
பைக்கிள் மாட்டியிருந்த பையை சோதனை செய்தபோது அதில் மதுபாட்டில்கள் கடத்திச் செல்வது தெரியவந்தது. அதனை தொடர்ந்து இருவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில் ராணிபேட்டை மாவட்டம் சோலிங்கபுரம், புள்ளிவலம் பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் ராஜி,20; மற்றும் ராமசாமி மனைவி லட்சுமி,45; என தெரியவந்தது.
மேலும் விசாரணையில் லட்சுமி தனது மகன் திருமண செலவிற்கு பணம் தேவைபட்டடால் புதுச்சேரிக்கு வந்து மதுபாட்டில்கள் வாங்கி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் இருந்த 186 மதுபாட்டில்களையும், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து. இருவரையும் கைது செய்து, கலால் துறையிடம் ஒப்படைத்தனர்.
