தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கொலை செய்ய காத்திருந்த 2 பேர் கத்தியுடன் கைது

 கொலை செய்ய காத்திருந்த 2 பேர் கத்தியுடன் கைது

 கொலை செய்ய காத்திருந்த 2 பேர் கத்தியுடன் கைது


ADDED : ஜூன் 24, 2026 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2026 01:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கொலை குற்றவாளிகளை யை கொலை செய்ய கத்தியுடன் காத்திருந்த இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி, வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கம் அருகே நேற்று விடியற்காலை சிலர் கத்தியுடன் சுற்றி வருவதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப் இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் விரைந்து சென்ற, அந்த கும்பலை மடக்கி பிடிக்க முயன்றனர். அவர்கள் தப்பியோடினர். அவர்களில் 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள், வில்லியனுார் அடுத்த உறுவையாறு, புதுநகரை சேர்ந்த குமார் மகன் சந்தோஷ்குமார், 23; அதேப்பகுதி முருகன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் மணிகண்டன், 20; என்பதும், இவர்கள், கடந்தாண்டு உறுவையாறில் நடந்த பிரபல ரவுடி ஜீவாவின் அண்ணன் சவுந்தர் கொலை வழக்கில், தொடர்புடைய குற்றவாளிகளை கோர்ட்டிற்கு அழைத்து வரும்போது, கொலை செய்ய கத்தியுடன் சுற்றி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அவர்களிடம் இருந்த ஒரு கத்தி, பைக் ஆகியற்றை பறிமுதல் செய்தனர். மேலும், கொலை வழக்கு குற்றவாளிகளை கொலை செய்ய கத்தியுடன் சுற்றி வந்ததாக வழக்கு பதிந்து இருவரையம் கைது செய்து, நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தப்பியோடிய முக்கிய குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us