/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
2 பேரிடம் ரூ. 13.27 லட்சம் மோசடி சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
/
2 பேரிடம் ரூ. 13.27 லட்சம் மோசடி சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
2 பேரிடம் ரூ. 13.27 லட்சம் மோசடி சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
2 பேரிடம் ரூ. 13.27 லட்சம் மோசடி சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
ADDED : ஜன 08, 2024 05:06 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் இருவரிடம் ரூ. 13.27 லட்சம் மோசடி செய்த சைபர் கிரைம் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
ரெட்டியார்பாளையம், சிவகாமி நகர், 7 குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சிவசந்திரன், 23; இவரது வாட்ஸ்ஆப் எண்ணில், பிரதமர் மோடி கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கடன் பெறலாம் என்ற விளம்பரம் வந்தது.
அந்த மொபைல் போன் எண்ணை சிவசந்திரன் தொடர்பு கொண்டார்.
அப்போது, ரூ. 10 லட்சம் லோன் தருவதாகவும், அதற்கு பைல் சார்ஜ் ஆக ரூ. 3,500, ஆறு மாதம் இ.எம்.ஐ., கட்ட தேவையில்லை என்றால் 2 மாத இ.எம்.ஐ., கட்ட வேண்டும் என கூறி, ரூ. 51,686, இன்ஸ்சூரன்ஸ்க்காக ரூ. 25,500, மேலாண் இயக்குநர் கமிஷன் தொகை என ரூ. 30,000, ஜி.எஸ்.டி.க்கு ரூ. 45,000 என பல்வேறு தவணைகளில் மொத்தம் 1.52 லட்சம் ரூபாயை மர்ம நபர் கூறிய ஜிபே அக்கவுண்டில் செலுத்தினார். ஆனால் லோன் கிடைக்கவில்லை.
இதுபோல், கோரிமேடு பிரியதர்ஷினி நகர், பூத்துறை சாலையைச் சேர்ந்தவர் முத்துராஜ், 53; தனியார் மருத்துவமனை ஊழியர். ஆன்லைன் வழியாக நீட் தேர்வுக்கு உயிரியல் பாடத்திற்கு பயிற்சி கொடுக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார்.
இவரது வாட்ஸ் ஆப்பில் ஸ்ரீலேகா என்ற பெண் தொடர்பு கொண்டு, ஆன்லைன் டிரேடிங் செய்ய அழைப்பு விடுத்தார்.அதை நம்பி ஸ்ரீலேகா அனுப்பிய வங்கி கணக்குகளில் பல தவணையாக ரூ. 11.75 லட்சம் பணம் முதலீடு செய்தார். ஆனால் லாப பணம் சேர்த்து திருப்பி செலுத்த கூறியபோது மர்ம நபர்கள் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இது தொடர்பாக புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.