/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
2 பேரிடம் ரூ. 2.40 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை
/
2 பேரிடம் ரூ. 2.40 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை
2 பேரிடம் ரூ. 2.40 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை
2 பேரிடம் ரூ. 2.40 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை
ADDED : செப் 20, 2024 03:40 AM
புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் இருவரிடம் 2.40 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
காரைக்காலை சேர்ந்தவர் அனிஸ் பிரவீன். இவரை மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்ட நபர், தங்கள் வாங்கிய கேரளா லாட்டரி சீட்டில், 12 லட்சம் ரூபாய் பரிசு விழுந்துள்ளது.
அதற்கு ஜி.எஸ்.டி., மற்றும் செயலாக்க கட்டணம் செலுத்த வேண்டும் என கூறினார். அதை நம்பி அவர், 2 லட்சம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
புதுச்சேரி காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிகலா கோஷ் என்பவரை மொபைல் போனில், தொடர்பு கொண்ட நபர், தன்னை போலீஸ் அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டார்.
'உங்களுக்கு வந்த பார்சலில், சட்டவிரோதமாக போதை பொருள் உள்ளது. உங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.
அதற்கு பயந்த அவர், வழக்கில் இருந்து, விடுபட 40 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார். இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.