சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் உட்பட 2 பேர் கைது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் உட்பட 2 பேர் கைது
ADDED : ஜன 11, 2026 05:05 AM
பாகூர்: 14 வயது சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 3 சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியை சேர்ந்த 14 வயது சிறுமி, 9ம் வகுப்பு படித்தார். கடந்த 2 நாட்களுக்கு முன், பள்ளிக்குச் சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், பல இடங்களில் தேடினர்.
இதனிடையே, அந்த சிறுமி, பாகூர் பகுதியில் இருப்பதாக தகவல் தெரிந்துள்ளது. இது குறித்து, பெற்றோர் அளித்த தகவலின் பேரில், பாகூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சோரியாங்குப்பம் ஆகாஷ், 18, என்ற வாலிபர், சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, அவரை அழைத்து சென்று, பாகூரில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து, தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, சிறுமியை போலீசார் மீட்டனர். மேலும், 'போக்சோ' பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, ஆகாஷ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்ற இருவரை தேடி வருகின்றனர்.
