/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின்சாரம் தாக்கி 2 பேர் படுகாயம்
/
மின்சாரம் தாக்கி 2 பேர் படுகாயம்
ADDED : ஜன 22, 2024 06:15 AM
வில்லியனுார் : அரியூரில் மின் கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி இருவர் படுகாயமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கொளத்துார், கண்டமானடி கிராமம் பஜனை கோவில் வீதியை சேர்ந்தவர் பிரபு, 40; தனியார் ஒப்பந்ததாரர் மூலம் மின் கம்பம் நடும் வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் மதியம் அரியூர் சாலையோரம் மின்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பி மீது, கம்பம் உராசியதால் பணியில் ஈடுபட்ட பிரபு மற்றும் உடன் வேலை செய்த ரவி ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்து, துாக்கி வீசப்பட்டனர்.
காயமடைந்த இருவரையும் அருகே இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு இல்லாமல் வேலை வாங்கிய ஒப்பந்ததாரர் மற்றும் மேஸ்திரி சிவசந்துரு, முத்துகுமாரசாமி மற்றும் மணிகண்டன் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.