/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது
/
கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது
ADDED : அக் 29, 2024 06:18 AM
அரியாங்குப்பம்: அரியாங்குப்பத்தில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய, இரண்டு பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அரியாங்குப்பம் சாலையில், இரு வாலிபர்கள், கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டுவதாக, நேற்று அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் அங்கு நின்ற இருவரை பிடித்து விசாரணை செய்தனர்.
அவர்கள், அரியாங்குப்பம், பாரதி நகரை சேர்ந்த தேவகணேஷ், 23; மூலக்குளம் ஜே.ஜே. நகரை சேர்ந்த மாரி அபியூத், 22; என தெரியவந்தது. அதில், மாரி அபியூத் மீது, கஞ்சா, ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கு உள்ளது.
அவர்களிடமிருந்து கத்தியை பறிமுதல், செய்து, இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.