/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுார் அருகே 2 ரவுடிகள் கைது
/
வில்லியனுார் அருகே 2 ரவுடிகள் கைது
ADDED : நவ 03, 2025 05:10 AM

வில்லியனுார்: வில்லியனுார் அருகே பயங்கர ஆயுதங்களுடன் வழிப்பறியில் ஈடுபட காத்திருந்த இரு ரவுடிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வில்லியனுார் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மேற்பார்வையில், சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.
கோட்டைமேடு பகுதியில் இளைஞர் ஒருவர் கத்தி மற்றும் ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசாரை கண்ட இளைஞர் தப்பிச்செல்ல முயன்றார்.
அவரை, போலீசார் மடக்கி, சோதனை செய்ததில், கத்தி மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
விசாரணையில், அவர், கணுவாப்பேட்டை, புது நகரை சேர்ந்த சந்திரசேகரன் மகன் நுாடிஷ், 23, என, தெரியவந்தது.
அதே போன்று நள்ளிரவு ரோந்து சென்ற போலீசாரை கண்டு கூடப்பாக்கம் சாலை, ரயில்வே கேட் அருகே புதர் பகுதியில் மறைந்திருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், பொறையூர் பேட் கருணாகரன் மகன் சூரியபிரகாஷ், 25, என, தெரியவந்தது.
இருவர் மீதும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இருவரும் கோட்டைமேடு மற்றும் பொறையூர் சாலையில் வழிப்பறி செய்வதற்கு திட்டம் தீட்டி ஆயுதங்களுடன் காத்திருந்தது தெரிந்தது. இது குறித்து வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.

