/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அடுத்தடுத்து 2 கடைகளில் திருட்டு; காரில் வந்த 3 பேர் கைவரிசை
/
அடுத்தடுத்து 2 கடைகளில் திருட்டு; காரில் வந்த 3 பேர் கைவரிசை
அடுத்தடுத்து 2 கடைகளில் திருட்டு; காரில் வந்த 3 பேர் கைவரிசை
அடுத்தடுத்து 2 கடைகளில் திருட்டு; காரில் வந்த 3 பேர் கைவரிசை
ADDED : பிப் 10, 2024 06:22 AM
புதுச்சேரி : புதுச்சேரி - விழுப்புரம் மெயின்ரோடு, மூலக்குளத்தில் முத்து காஸ் ஏஜென்சி இயங்கி வருகிறது. கடந்த 8ம் தேதி, காஸ் ஏஜென்சி கடை ஷட்டரை உடைத்து, 9 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அதே நாளில், ரெட்டியார்பாளையத்தில் புதிதாக திறக்கப்பட்ட ரத்னா ஸ்டோர் பாத்திர கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், கல்லா பெட்டியில் இருந்த 84 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, தடயங் களை சேகரித்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நள்ளிரவு நேரத்தில் காரில் வந்த 3 நபர்கள், ஷட்டரை உடைக்காமல் நெம்பி திறந்து கடைக்குள் புகுந்து பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
பாம்பு போல் புகுந்த நபர் வீடியோ காட்சி வைரல்
போலீசார் சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்த போது, ரத்னா ஸ்டோர் ஷட்டர்களை இரும்பு கம்பியால் நெம்பி, அந்த சந்து வழியாக பாம்பு போல் வளைந்து நெளிந்து உள்ள மர்ம நபர் ஒருவர் நுழைந்தார்.
அவர், கல்லா பெட்டியை இரும்பு கம்பி கொண்டு லாவகமாக திறந்து, அதில் கத்தை கத்தையாக இருந்த பணத்தை எடுத்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.