/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கத்தியுடன் பதுங்கிய 2 வாலிபர்கள் கைது
/
கத்தியுடன் பதுங்கிய 2 வாலிபர்கள் கைது
ADDED : நவ 11, 2024 07:36 AM
புதுச்சேரி : வில்லியனுாரில் குற்றசம்பவத்தில் ஈடுபட கத்தியுடன் பதுங்கி இருந்த இரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு 1.15 மணியளவில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது வில்லியனுார் கோபாலன் கடை அரசு தொடக்கப் பள்ளி அருகில் இரு வாலிபர்கள் போலீசாரை பார்த்தும் தப்பியோட முயன்றனர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.
அதில் அவர்கள் வில்லியனுார் கோபாலன் கடை அம்மன் நகரைச் சேர்ந்தவர் இளவரசன் 23, மூலகுளம் டைமண்ட் நகர் 2 வது தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் 20, என்பதும், இவர்கள் வீச்சரிவாள் வைத்துக் கொண்டு குற்றசம்பவத்தில் ஈடுபட இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.