ADDED : ஏப் 18, 2026 08:35 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களைப் போலீசார் கைது செய்தனர்.
பூமியான்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், சப்இன்ஸ்பெக்டர் ரவிவர்மன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
பூமியான்பேட்டை பொதுக் கழிப்பிடம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவர், போலீசாரைப் பார்த்ததும் தப்பியோட முயன்றனர். அவர்களை, போலீசார் மடக்கிப் பிடித்து சோதனை செய்தபோது 10 சிறிய பொட்டலங்களில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவர்கள் பூமியான்பேட்டை உழந்தை ஏரிப்பாதையைச் சேர்ந்த வருணா முத்து மகன் வாசு, 20; மற்றும் ஜவஹர் நகரைச் சேர்ந்த சுரேஷ் மகன் சுனில் குமார், 18, என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களிடம் இருந்து 88 கிராம் கஞ்சா மற்றும் ஒரு கருப்பு நிற ஐபோன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிந்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
