ADDED : டிச 21, 2024 06:11 AM
புதுச்சேரி : மங்கலம் அருகே கஞ்சா விற்ற இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனுார் அடுத்த மங்கலம் பகுதியில் கம்பெனி ஊழியர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அய்யனார் கோவில் பகுதியில் இருந்த இரு வாலிபர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றனர்.
அவர்களை போலீசார் மடக்கி, விசாரித்தனர். உறுவையாறு செல்வா நகர், 3 வது தெருவைச் சேர்ந்த முருகன், 23; புதுக்கடை வீரபத்திரன் வீதியைச் சேர்ந்த அர்ஜூனன், 24, என்பதும், இவர்கள் கம்பெனியில் வேலை செய்யும் தொழிலாளர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த, போலீசார் 200கிராம் கஞ்சா மற்றும் பட்டா கத்தியை பறிமுதல் செய்தனர்.
