தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

 கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

 கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது


ADDED : பிப் 27, 2026 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2026 04:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர் பிப். 27-: பாகூர் அடுத்த மணமேடு கிராமத்தில் கஞ்சா விற்பதாக கரையாம்புத்துார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு மணமேடு கிராமத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அங்குள்ள தனியார் மதுபான கடையின் பின்புறம் உள்ள மோட்டார் கொட்டகையில் இருந்த இரண்டு வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பிச் செல்ல முயன்றனர். போலீசார் அவர்களை, மடக்கி பிடித்து விசாரித்தனர்.

கரையாம்புத்துார், நேரு நகரை சேர்ந்த சரவணன் மகன் தினேஷ்குமார், 21; மருத்துவமனை வீதியை சேர்ந்த அழகுமுத்து மகன் புஷ்பராஜ், 20; என்பதும், இருவரும் கஞ்சா விற்றது தெரியவந்தது. அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 355 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us