/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது
/
ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது
ADDED : மார் 13, 2026 06:23 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டையில் நள்ளிரவில் ஆடு திருடிய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன். இவரது வீட்டில் கட்டி வைத்திருந்த ஆடுகளை கடந்த 7ம் தேதி அதிகாலை, 3 பேர் அர்ஜூனனை தாக்கி, ஆட்டை திருடி சென்றனர்.
இதுகுறித்து புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர் . இந்நிலையில் வடக்கு பிரிவு எஸ்.பி., வம்சீதர ரெட்டி உத்தரவின் பேரில், போலீசார் தனிப்படை அமைத்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில், முத்துப்பிள்ளைபாளையம் புதுநகரைச் சேர்ந்த பக்தவச்சலம் மகன் பரத், 21; முருகன் மகன் வேதவன், 20, ஆகியோர் ஆடு திருடி சென்றது தெரியவந்தது.
அதையடுத்து போலீசார் அவர்களிடமிருந்து ஆடு திருடிச்சென்று விற்ற 4,000 ரூபாய் மற்றும் ஆடு திருட பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.

