ADDED : ஜூலை 07, 2025 01:37 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பெண்களை கிண்டல் செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ஒதியஞ்சாலை போலீசார் நேற்று முன்தினம் இரவு கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். டூப்ளக்ஸ் சிலை அருகே இரு வாலிபர்கள் நின்று கொண்டு, அவ்வழியாக செல்லும் பெண்களை கிண்டல் செய்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். மதுரை அடுத்த கோரிப்பாளையத்தை சேர்ந்த பாலாஜி, 24, திருவள்ளுவர் மாவட்டம் திருவலங்காடு பகுதியை சேர்ந்த குணசேகர், 25, என்பது தெரியவந்தது.
போலீசார் இருவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
