/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கத்தியை காட்டி மிரட்டிய 2 வாலிபர்கள் கைது
/
கத்தியை காட்டி மிரட்டிய 2 வாலிபர்கள் கைது
ADDED : ஜூன் 19, 2025 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி,: பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
உருளையன்பேட்டை, சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் சாந்தி நகர் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அங்கு இரண்டு வாலிபர்கள் கத்தியை காட்டி, பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்தனர்.
போலீசார் இருவரையும் பிடித்து விசாரித்தனர்.
அவர்கள், உருளையன்பேட்டை, முருகன் வீதியை சேர்ந்த பரத், 23; கென்னடி நகர் சதீஷ், 23, என்பது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து போலீசார் கத்தியை பறிமுதல் செய்து, கைது செய்தனர். அவர்களை, கோர்ட்டில், ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.