/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கத்தியை காட்டி மிரட்டிய 2 வாலிபர்கள் கைது
/
கத்தியை காட்டி மிரட்டிய 2 வாலிபர்கள் கைது
ADDED : நவ 04, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய, இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ரெட்டியார்பாளையம் புதுநகரில், வாலிபர்கத்தியை காட்டி, பொதுமக்களை மிரட்டி வருவதாக ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது.
அதையடுத்து, போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், புதுநகரை சேர்ந்த ஜெயம் சூசைராஜ், 24; என்பது தெரியவந்தது. கத்தியை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
தொடர்ந்து, ரெட்டியார்பாளையம் ரிப்பளிக் தெருவில், கத்தியை காட்டி மிரட்டிய, அதே பகுதியை சேர்ந்த பொன்னுமணி (எ) தாமஸ், 24; என்பரை ரெட்டியார்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

