/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
20 ஓவர் கிரிக்கெட் போட்டி: கிங்ஸ் லெவன் அணி வெற்றி
/
20 ஓவர் கிரிக்கெட் போட்டி: கிங்ஸ் லெவன் அணி வெற்றி
20 ஓவர் கிரிக்கெட் போட்டி: கிங்ஸ் லெவன் அணி வெற்றி
20 ஓவர் கிரிக்கெட் போட்டி: கிங்ஸ் லெவன் அணி வெற்றி
ADDED : நவ 13, 2024 08:56 PM

அரியாங்குப்பம் ; தவளக்குப்பத்தில், நடந்த, 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், கிங்ஸ் லெவன் அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.
கிங்ஸ் ஸ்டார் கிரிக்கெட் கிளப் சார்பில் முதலாம் ஆண்டு, 20 ஓவர் தொடர் கிரிக்கெட் போட்டி, தவளக்குப்பத்தில் நடந்தது. இப்போட்டியில், இடையார்பாளையம், தானாம்பாளையம், தவளக்குப்பம், பூரணாங்குப்பம், நல்லவாடு, காட்டுப்பாளையம், அபிேஷகப்பாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 16 அணிகள் பங்கேற்றன.
இறுதி போட்டியில், கிங்ஸ் ஸ்டார் கிரிக்கெட் கிளப் மற்றும் கிங்ஸ் லெவன் கிரிக்கெட் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த கிங் ஸ்டார் அணி 20 ஓவர்களில் 226 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் தியாகு 100 ரன்கள் எடுத்தார்.
அடுத்து ஆடிய கிங்ஸ் லெவன் அணி 20 ஓவரில் 227 ரன்கள் எடுத்து, முதல் பரிசை தட்டி சென்றது. இந்த அணியின், வீரர் அரவிந்த், கடைசி ஓவரில், 18 ரன்கள் எடுத்து வெற்றியை தேடி தந்தார்.

