/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் பாதுகாப்புக்கு 2,000 போலீசார் குவிப்பு 10 இடங்களில் தற்காலிக பார்க்கிங் வசதி

ADDED : டிச 31, 2024 04:48 AM
புதுச்சேரி : புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பிற்காக, ஒயிட் டவுனில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதுடன், பாதுகாப்பு பணியில் 2000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட ஆயிரக்கணக்கான வெளிமாநில சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
ரிசார்ட்டுகள், தனியார் நிர்வகிக்கும் கடற்கரை, ஓட்டல்களில் மது விருந்துடன் கூடிய பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடற்கரை சாலை மற்றும் ஓட்டல்களில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நகர மற்றும் கடற்கரை சாலையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் கடலில் இறங்காதபடி தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் 2000க்கும் அதிகமான போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இன்று 31ம் தேதி மதியம் 2:00 மணி முதல் நாளை 1ம் தேதி காலை 9:00 மணி வரை ஒயிட் டவுன் பகுதிக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புதுச்சேரி கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்த தற்காலிக பார்க்கிங் வசதிசெய்யப்பட்டுள்ளது.
தற்காலிக பார்க்கிங் இடத்தில் இருந்து கடற்கரைக்கு செல்ல பி.ஆர்.டி.சி., மூலம் 30 இலவச பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று 31ம் தேதி மதியம் 2:00 மணி முதல் நாளை 1ம் தேதி காலை 6:00 மணி வரை, நகர பகுதியில் கனரக வாகனங்கள் செல்லவும், சாலையில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட் டுள்ளது.