/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தீயணைப்பாளர் பணிக்கு நாளை எழுத்து தேர்வு 5 மையங்களில் 2,093 பேர் எழுத ஏற்பாடு
/
தீயணைப்பாளர் பணிக்கு நாளை எழுத்து தேர்வு 5 மையங்களில் 2,093 பேர் எழுத ஏற்பாடு
தீயணைப்பாளர் பணிக்கு நாளை எழுத்து தேர்வு 5 மையங்களில் 2,093 பேர் எழுத ஏற்பாடு
தீயணைப்பாளர் பணிக்கு நாளை எழுத்து தேர்வு 5 மையங்களில் 2,093 பேர் எழுத ஏற்பாடு
ADDED : பிப் 08, 2025 05:57 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை (9ம் தேதி) நடக்கும் தீயணைப்பாளர் மற்றும் வாகன ஓட்டுநர் பணிக்கான எழுத்து தேர்வை 2093 பேர் எழுத உள்ளனர்.
இது குறித்து, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார்ஜா செய்தி குறிப்பு:
புதுச்சேரி தீயணைப்பு துறையில், தீயணைப்பாளர் மற்றும் டிரைவர் நிலை-3 பணியிடத்திற்கான எழுத்து தேர்வு, நாளை (9ம் தேதி) 5 மையங்களில் நடக்க உள்ளது. காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடக்கும் இத்தேர்வை 2093 தேர்வர்கள் எழுத உள்ளனர்.
விண்ணப்பதாரர்கள், ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். ஹால்டிக்கெட்டில் அவர்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி கையொப்பமிட்டு எடுத்து வர வேண்டும். ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வருமான வரி பான் கார்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் அசலை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
தேர்வர்கள் விரல் ரேகை பதிவு செய்யப்பட்ட பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். தேர்வு மையம் 9:30 மணிக்கு மூடப்படும் என்பதால், தேர்வு மையத்திற்குள் முன்னதாகவே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
கருப்பு வண்ண பால் பாய்ண்ட் பேனா, ஹால்டிக்கெட், அசல் அடையாள அட்டை மட்டுமே தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும். கை பைகள், மொபைல் போன், புளுடூத் சாதனங்கள், ஹெட்போன்கள், கால்குலேட்டர், பென் டிரைவ் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹால்டிக்கெட்டினை recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். மேலும் உதவிக்கு 0413 2233338 என்ற எண்ணில், இன்று தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.