/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அசிஸ்டண்ட் பதவிக்கான தேர்வு 212 பேர் பங்கேற்பு; 17 பேர் 'ஆப்சென்ட்'

ADDED : டிச 09, 2024 04:46 AM

புதுச்சேரி : அசிஸ்டண்ட் பதவிக்கான துறை சார்ந்த போட்டி தேர்வினை 212 பேர் எழுதினர்.
புதுச்சேரி அரசு துறைகளில் ஐந்தாண்டுகளுக்கு மேல் பணியாற்றும் யூ.டி.சி.,களுக்கு அசிஸ்டண்ட்களாக போட்டி தேர்வு நடத்தி பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. அதன்படி 39 அசிஸ்டண்ட் பதவி உயர்வுக்கான துறை சார்ந்த போட்டி தேர்வு லாஸ்பேட்டை வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை முதல் தாளும், மதியம் 2:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை இரண்டாம் தாளும் நடந்தது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த 229 யூ.டி.சி.,களில் 212 பேர் எழுதினர். 17 பேர் தேர்வுக்கு வரவில்லை. தேர்வு மையத்தை நிர்வாக சீர்த்திருத்த துறை செயலர் கேசவன், சார்பு செயலர் ஜெய்சங்கர் ஆய்வு செய்தனர்.
ஓ.எம்.ஆரில் ஷீட் போன்று இல்லாமல் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. எனவே அனைத்து தாள்களும் திருத்தப்பட்டு ஒரு மாதத்திற்குள் ரிசல்ட் வெளியிடப்பட உள்ளது.