தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஒருங்கிணைந்த உயர்நிலை பள்ளி நிலை போட்டி தேர்வு நாளை 59 மையங்களில் 21,688 பேர் எழுதுகின்றனர்

 ஒருங்கிணைந்த உயர்நிலை பள்ளி நிலை போட்டி தேர்வு நாளை 59 மையங்களில் 21,688 பேர் எழுதுகின்றனர்

 ஒருங்கிணைந்த உயர்நிலை பள்ளி நிலை போட்டி தேர்வு நாளை 59 மையங்களில் 21,688 பேர் எழுதுகின்றனர்


ADDED : மே 30, 2026 03:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2026 03:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஒருங்கிணைந்த உயர்நிலைபள்ளி நிலை தேர்வு பதவிக்கான போட்டி தேர்வினை 21,688 பேர் எழுதுகின்றனர்.

புதுச்சேரி நிர்வாக சீர்த்திருத்த துறை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார் ஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி, கலை மற்றும் பண்பாட்டுத் துறையில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த உயர்நிலைப்பள்ளி நிலைத் தேர்வு பதவிகளுக்கான போட்டி எழுத்துத் தேர்வு நாளை 31ம் தேதி புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பகுதியில் அமைக்கப்பட்ட 59 தேர்வு மையங்களில் நடக்கிறது.

தேர்வு காலை 10:00 முதல் 12:00 மணி வரை நடக்கும். 21,688 பேர் தேர்வு எழுத உள்ளனர். ஹால்டிக்கெட்டில் அவர்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை உரிய இடத்தில் ஒட்டி கையொப்பமிட்டு எடுத்து வரவேண்டும்.

விண்ணப்பதாரர்கள் ஹால்டிக்கெட்டுடன் தங்களின் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், வருமான வரி பான் கார்டு இவற்றுள் ஏதாவது ஒன்றின் அசலை கட்டாயம் கொண்டு வரவேண்டும். தேர்வர்களின் கைவிரல் ரேகை பதிவு செய்யப்பட்ட பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். தேர்வர்கள் உரிய நேரத்திற்கு முன்னரே தேர்வு மையத்திற்கு வர வேண்டும்.

தேர்வு மையத்தின் நுழைவு வாயில் காலை 9:30 மணிக்கு மூடப்படும். அதற்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு மையத்தில் நுழைவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

தேர்வர்கள் கருப்பு வண்ண பால் பாய்ண்ட் பேனா, ஹால்டிக்கெட் மற்றும் அசல் அடையாள அட்டை மட்டுமே தேர்வு மையத்திற்குக் கொண்டு வரவேண்டும். கைப்பைகள், மொபைல் போன்கள், புளு டூத் சாதனங்கள், ஹெட் போன்கள், கால்குலேட்டர்கள், பென் டிரைவ் போன்ற இதர எலக்ட்ரானிக் சாதனங்களை கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது.

மொபைல், இன்டர்நெட் சேவைகளை தடுப்பதற்கான ஜாமர் கருவிகளும், அனைத்துத் தேர்வு அறைகளிலும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. ஹால்டிக்கெட்டை https://recruitment.py.gov.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வின் போது முறைகேடு கண்டறியப்பட்டால், எப்.ஐ.ஆர்., பதிவு செய்தல் மற்றும் எதிர்காலத் தேர்வுகளில் இருந்து தடை உட்பட கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

உதவி தேவைப்பட்டால், தேர்வர்கள் அலுவலக நேரத்தில் 0413-2233338 என்ற தொலைபேசி எண்ணில் நாளை காலை 9:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us