/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய அரசின் ஆன்லைன் போர்ட்டலில் பதிவு செய்யாத 22 தொழிற்சாலைகள்
/
மத்திய அரசின் ஆன்லைன் போர்ட்டலில் பதிவு செய்யாத 22 தொழிற்சாலைகள்
மத்திய அரசின் ஆன்லைன் போர்ட்டலில் பதிவு செய்யாத 22 தொழிற்சாலைகள்
மத்திய அரசின் ஆன்லைன் போர்ட்டலில் பதிவு செய்யாத 22 தொழிற்சாலைகள்
ADDED : அக் 29, 2024 06:08 AM
புதுச்சேரி: மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரிய ஆன்லைன் போர்ட்டலில் பதிவு செய்யாத 22 தொழிற் சாலை களின் மின் இணைப்பை துண்டிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் மின்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு இன்றைய வாழ்வியலில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பிளாஸ்டிக் பயன்படுத்திய பிறகு இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு மிகவும் கவலை அளித்து வருகிறது.
பிளாஸ்டிக் பயன்படுத்திய பிறகு, அதனால் ஏற்படும் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை சேகரித்து அதனை அறிவியல் முறைப்படி அப்புறப்படுத் தும் பொறுப்பு, தயாரிப்பாளரிடம் ஒப்படைப்பதிற்காக மத்திய அரசு கடந்த 2022ம் ஆண்டு ஒரு சட்டம் கொண்டு வந்தது. இதற்காக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிரத்யேகமான ஆன்லைன் போர்ட்டல் உருவாக்கியது.
இதில், அனைத்து பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் உற்பத்தியாளர்கள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
புதுச்சேரியில் 67 பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளது.
இதில், 45 தொழிற்சாலைகள் ஆன்லைன் போர்ட்டலில் பதிவு செய்துள்ளன. 22 தொழிற்சாலைகள் பதிவு செய்யவில்லை. இதனால் புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமம் பல முறை நோட்டீஸ் அனுப்பியும் தொழிற்சாலைகள் பதிவு செய்யவில்லை.
இதனால் 22 தொழிற்சாலைகளின் மின் இணைப்பை துண்டிக்க, சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின்படி, புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழும தலைவர் ஜவகர் ஒப்புதலின்படி, உறுப்பினர் செயலர் ரமேஷ், மின்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
பதிவு செய்யாத இத்தகைய தொழிற்சாலைகளுக்கு சுற்றுச்சூழல் இழப்பீடு தொகை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

