/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜிப்மரில் 22ம் தேதி அரை நாள் விடுமுறை
/
ஜிப்மரில் 22ம் தேதி அரை நாள் விடுமுறை
ADDED : ஜன 20, 2024 05:55 AM
புதுச்சேரி : ஜிப்மர் மருத்துவமனை வரும் 22ம் தேதி அரை நாள் இயங்காது என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிேஷக விழா வரும் 22ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு ஜிப்மர் நிறுவனம் 22ம் தேதி மதியம் 2:30 மணி வரை அரை நாள் இயங்காது.
இந்த நேரத்தில் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். இருப்பினும் அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும். சிறப்பு கிளினிக்குகள் உள்பட அனைத்து மருத்துவமனை சேவைகள் மதியம் 2:30 மணிக்கு பிறகு வழக்கம்போல் முழுமையாக செயல்படும்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.