நர்சிங் நுழைவுத்தேர்வுக்கு 2,312 பேர் விண்ணப்பிப்பு
நர்சிங் நுழைவுத்தேர்வுக்கு 2,312 பேர் விண்ணப்பிப்பு
ADDED : ஜூன் 04, 2026 03:34 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: நர்சிங் நுழைவுத் தேர்வுக்கு 2,312 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
புதுச்சேரியில் 2 அரசு செவிலியர் கல்லுாரிகளும், 11 தனியார் நர்சிங் கல்லுாரிகளும் உள்ளன. இக்கல்லுாரிகளில் பி.எஸ்சி., நர்சிங் படிப்பில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக சுகாதாரத்துறை மூலம் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு, சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
அந்த வகையில், 2026-2 7ம் ஆண்டு பி.எஸ்சி., நர்சிங் படிப்பில் அரசு ஒதுக்கீட்டாக 558 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான பொது நுழைவுத்தேர்வு வரும் 14ம் தேதி நடக்கிறது. நுழைவுத்தேர்வுக்கு சென்டாக் இணையதளத்தில் 2,413 பேர் பதிவு செய்துள்ளனர்.
இதில், புதுச்சேரி, 1,660 பேரும், காரைக்கால், 472, மாகி, 98, ஏனாம் 82 என, மொத்தம் 2,312 விண்ணப்பித்துள்ளனர்.
