/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி நிலப்பரப்பு 24 மணி நேரமும் கண்காணிப்பு ராஜிவ்காந்தி மருத்துவமனையில் மையம் அமைப்பு
/
புதுச்சேரி நிலப்பரப்பு 24 மணி நேரமும் கண்காணிப்பு ராஜிவ்காந்தி மருத்துவமனையில் மையம் அமைப்பு
புதுச்சேரி நிலப்பரப்பு 24 மணி நேரமும் கண்காணிப்பு ராஜிவ்காந்தி மருத்துவமனையில் மையம் அமைப்பு
புதுச்சேரி நிலப்பரப்பு 24 மணி நேரமும் கண்காணிப்பு ராஜிவ்காந்தி மருத்துவமனையில் மையம் அமைப்பு
ADDED : மார் 24, 2025 04:15 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் நில அளவை சர்வே எடுப்பதற்காக மைய நிலையம் ராஜிவ்காந்தி மகளிர் குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தின் நான்கு பிராந்தியங்களும் பிரெஞ்சியர் ஆட்சிக்காலத்திலேயே நேர்த்தியாக திட்டமிட்டு கட்டப்பட்ட அழகிய நகரம். புதுச்சேரி இணைந்த பிறகு புதிய சர்வே சட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
அதன் பிறகு 1972 இல் புதுச்சேரி மாநிலம் முழுவதும், முழுமையான நில அளவைக்காக சர்வே பணி துவங்கியது. பல்வேறு கட்டங்களாக நடந்த இப்பணி ஒருவழியாக கடந்த 1979 இல் நிறைவடைந்தது.
அந்த ரீசர்வே தான், இன்றைக்கு எல்லைசாமிகளாக உள்ளன. இவை, எப்.எம்.பி., எனப்படும் புலப்பட நகலை, எல்லைகளாக கொண்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மாநிலத்தின் நான்கு பிராந்தியங்களையும் உள்ளடக்கிய முழுமையாக நவீன தொழில்நுட்ப முறையில் ரீசர்வே செய்ய புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக கடந்த 1967ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதுச்சேரி அரசின் சர்வே மற்றும் நில எல்லை சட்டத்தில் நவீன தொழில்நுட்பத்தின்படி சர்வே செய்ய புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கிடையில் புதுச்சேரியில் நில அளவை எடுக்கும் வகையில், ராஜிவ்காந்தி மகளிர் குழந்தைகள் மருத்துவமனையில் மையம் நிலையம் 30 லட்சம் செலவில் மைய நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான நவீன கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக நில அளவை துறை அதிகாரிகள் கூறும்போது மத்திய அரசின் தேசிய நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 1018 இடங்களில் கார்ஸ் கருவி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இந்த கருவி ஏற்படுத்தப்பட்டுள்ளது. துல்லியமான தொழிநுட்பத்துடன் கூடிய இக்கருவி வாரத்தின் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் புதுச்சேரி நிலப்பரப்பை கண்காணிக்கும்.
இந்த மைய புள்ளியில் இருந்து புதுச்சேரி நிலப்பரப்பினை சர்வே செய்யும் பணியும் துவங்கும் என்றனர்.