sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 காரைக்கால் மீனவர்கள் 24 பேர் கைது

/

 காரைக்கால் மீனவர்கள் 24 பேர் கைது

 காரைக்கால் மீனவர்கள் 24 பேர் கைது

 காரைக்கால் மீனவர்கள் 24 பேர் கைது


ADDED : பிப் 17, 2026 04:00 AM

Google News

ADDED : பிப் 17, 2026 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவருக்கு சொந்தமான விசைப்படகில், கடந்த 15ம் தேதி அதே பகுதியை சேர்ந்த 14 பேர் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதேபோல், கீழகாசாகுடியை சேர்ந்த வைத்தியநாதன் விசைப்படகில், அதே பகுதியை சேர்ந்த 10 பேர் கடந்த 12ம் தேதி கடலுக்கு சென்றனர்.

இரு குழுவினரும் நேற்று முன்தினம் இரவு கோடியகரைக்கு தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். நள்ளிரவில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இரு விசைப்படகுகளையும் சுற்றி வளைத்தனர். எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, படகுகளில் இருந்த 24 பேரையும் கைது செய்து,. 2 விசைபடகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை காங்கேசன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், காரைக்கால் மாவட்ட மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியள்ளது.






      Dinamalar
      Follow us