2.5 கிலோ கஞ்சா பறிமுதல் காரைக்காலில் 4 பேர் கைது
2.5 கிலோ கஞ்சா பறிமுதல் காரைக்காலில் 4 பேர் கைது
ADDED : பிப் 25, 2026 05:31 AM
காரைக்கால்: காரைக்காலில் இரு இடங்களில் கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
காரைக்கால், திருப்பட்டினம் சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.
பட்டினச்சேரி சாணிபாறை இடுகாடு அருகில் கஞ்சா விற்ற இருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர்கள் நாகப்பட்டினம் செக்கடி தெரு, ராமலிங்கம் மகன் பாலா,19; காரைக்கால் காமராஜ் நகர் கணேசன் மகன் மாதவன்,22; ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள 1,282 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேப்போல், காரைக்கால் சிங்காரவேலர் சாலையில் கஞ்சா விற்ற காரைக்கால், மஸ்தான் பள்ளி வீதி ராஜ்குமார் மகன் சந்தோஷ்குமார, 23; காரைக்கால்மேடு, சுனாமி நகர் பழனிராஜன் மகன் கவிமணி,25; ஆகியோரை காரைக்கால் நகர போலீசாார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள 1,250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
