/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
25 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் தத்தளிப்பு
/
25 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் தத்தளிப்பு
ADDED : டிச 02, 2024 04:56 AM
புதுச்சேரி : புதுச்சேரி, காரைக்காலில் இடைவிடாது பெய்த கனமழையால் விளைநிலங்கள் அனைத்தும் 3 அடி முதல் 5 அடிவரை தண்ணீர் தேங்கி பயிர்கள் அனைத்து நாசமாகியுள்ளது.
வாழை, கரும்பு பயிர்கள் விளைநிலங்களில் சரிந்து கிடக்கின்றன. பாதிக்கப்பட்ட விளைநிலங்களை அமைச்சர் தேனீஜெயக்குமார், வேளாண் துறை இயக்குனர் வசந்தகுமார் ஆகியோர் பார்வையிட்டனர்.
அப்போது இடுப்பளவிற்கு தண்ணீரில் மூழ்கியுள்ள பயிரிகளை காண்பித்து விவசாயிகள் கண்ணீர் விட்டனர். அவர்களுக்கு அமைச்சர் தேனீஜெயக்குமார் ஆறுதல் கூறினார்.
வேளாண் துறை இயக்குனர் வசந்தகுமார் கூறுகை யில், 'கனமழையால் ஒட்டு மொத்தமாக புதுச்சேரியில்- 14,250 ஏக்கர், காரைக்காலில் 11,000 ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகியுள்ளது. கூனிச்சம்பட்டு உள்பட பல்வேறு கிராமங்களில் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. பயிர்கள் பாதிப்பு குறித்து கள ஆய்வாளர்களை இறக்கி முழுமையாக கணக்கெடுத்து வருகிறோம். விவசாயிகளின் பாதிப்பு குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது' என்றார்.