தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் நாளை ஓட்டு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் 2,600 போலீசார்

 புதுச்சேரியில் நாளை ஓட்டு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் 2,600 போலீசார்

 புதுச்சேரியில் நாளை ஓட்டு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் 2,600 போலீசார்


ADDED : மே 03, 2026 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 03, 2026 05:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரியில் நாளை ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதற்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு கடந்த 9ம் தேதி நடந்தது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்கிறது. இந்நிலையில் 23 தொகுதிகளின் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் லாஸ்பேட்டை அரசு பெண்கள் பொறியியல் கல்லுாரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுாரி, தாகூர் அரசு கலைக்கல்லுாரி ஆகிய 3 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், காரைக்காலில் 5 தொகுதி ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கருணாநிதி பட்ட மேற்படிப்பு மையத்திலும், மாகியில் அரசு மேல் நிலைப்பள்ளியிலும், ஏனாமில் அரசு கலைக்கல்லுாரியிலும் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கையை யொட்டி புதுச்சேரியில் 4 பிராந்தியங்களிலும் மொத்தம் 2,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

அதன்படி, ஓட்டு எண்ணிக்கை நாளான நாளை புதுச்சேரியில் 3 ஷிப்டுகளில் 1,250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

காலை 5 மணி முதல் முதல் மதியம் 1 மணி வரை முதல் ஷிப்ட், மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை 2-வது ஷிப்ட், இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை 3-வது ஷிப்ட் என பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்களோடு 200 துணை ராணுவத்தினரும் பணியில் ஈடுபடுத்தப் படுகிறார்கள்.

காரைக்காலில் 500, மாகியில் 400, ஏனாமில் 450 போலீசாரும், அவர்களோடு தலா 100 துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இவர்களோடு சிறப்பு அதிரடிப்படையினர், பெண் கமாண்டோக்களும் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். -

பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ஆலோசனை கூட்டம் ஆசிரம கருத்தரங்க வளாகத்தில் நேற்று நடந்தது. நிகழ்சியில், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் தலைமை தாங்கினார். தேர்தல் பிரிவு எஸ்.பி., சரவணன் முன்னிலை வகித்தார். சீனியர் எஸ்.பி., கலைவாணன் மற்றும் எஸ்.பி.,க்கள் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us