/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆன்லைன் பட்டாசு விளம்பரம்; 280 பேர் ரூ.15 லட்சம் இழந்தனர்
/
ஆன்லைன் பட்டாசு விளம்பரம்; 280 பேர் ரூ.15 லட்சம் இழந்தனர்
ஆன்லைன் பட்டாசு விளம்பரம்; 280 பேர் ரூ.15 லட்சம் இழந்தனர்
ஆன்லைன் பட்டாசு விளம்பரம்; 280 பேர் ரூ.15 லட்சம் இழந்தனர்
ADDED : அக் 27, 2024 04:23 AM
ஆன்லைன் பட்டாசு விளம்பரத்தை நம்பி 280க்கும் மேற்பட்டோர் 15 லட்சம் ரூபாயை இழந்தனர். புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் ஆன்லைன் விளம்பரத்தை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனை மீறி ஆன்லைனில் அய்யப்பா கிராக்கர்ஸ் என்ற விளம்பரத்தை நம்பி, புதுச்சேரியைச் சேர்ந்த 280 பேர், ரூ. 5,000 முதல் ரூ. 35 ஆயிரம் வரை பணம் செலுத்தினர். ஆனால், மர்ம நபர்கள் கூறியப்படி பட்டாசு இதுவரை வந்துசேர வில்லை.
ஆன்லைன் மோசடி கும்பலிடம் குறைந்த விலைக்கு பட்டாசு வாங்க பணம் செலுத்தி ஏமாந்த நபர்கள் ஒன்று கூடி, வாட்ஸ்ஆப் குரூப் உருவாக்கி அதில், தாங்கள் எவ்வாறு ஏமாந்ததை பற்றி எச்சிரிக்கை செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசிலும் புகாராக அளித்துள்ளனர்.ஆன்லைனில் வரும் விளம்பரங்களை நம்பி பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம் என, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.