/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விரைவில் 2வது சுற்று அரசு வேலைவாய்ப்பு... அறிவிப்பு; இரண்டாயிரம் பணியிடங்களை நிரப்ப முடிவு
/
விரைவில் 2வது சுற்று அரசு வேலைவாய்ப்பு... அறிவிப்பு; இரண்டாயிரம் பணியிடங்களை நிரப்ப முடிவு
விரைவில் 2வது சுற்று அரசு வேலைவாய்ப்பு... அறிவிப்பு; இரண்டாயிரம் பணியிடங்களை நிரப்ப முடிவு
விரைவில் 2வது சுற்று அரசு வேலைவாய்ப்பு... அறிவிப்பு; இரண்டாயிரம் பணியிடங்களை நிரப்ப முடிவு
ADDED : டிச 16, 2024 06:47 AM
புதுச்சேரி: அரசு பணிக்கான இரண்டாம் சுற்று வேலைவாய்ப்புகளை அடுத்தடுத்து வெளியிட நிர்வாக சீர்த்திருத்த துறை ரெடியாகி வருகின்றது.
புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் 10 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. என்.ஆர்.காங்.,-பா.ஜ., ஆட்சி பொறுப்பேற்றதும் இந்த காலி பணியிடங்களை நிரப்பப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அதையடுத்து தொடர்ச்சியாக, அரசு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இதுவரை, 2000 அரசு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு, அந்த பணியிடங்களை 90 சதவீதம் நிரப்பியுள்ளது. தொடர்ந்து மீதமுள்ள 8,000 ஆயிரம் காலி பணியிடங்கள் இன்னும் அரசு நிரப்ப வேண்டியுள்ளது.
நிர்வாக சீர்த்திருத் துறையின் தேர்வு பிரிவில் குறைந்த எண்ணிக்கையிலேயே நிரந்தர பிரிவு ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் தான் அனைத்து அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர். இவ்வளவு குறைவான பணியாளர்களை வைத்துக்கொண்டு இதுவரை அரசு போட்டி தேர்வுகளை நடத்தியதே பெரிய சவாலாக அமைந்தது.
இந்த சூழ்நிலையில், இரண்டாம் சுற்று அரசு வேலைவாய்ப்புகளை அடுத்தடுத்து வெளியிட நிர்வாக சீர்த்திருத்த துறை ரெடியாகி வருகின்றது. இது தொடர்பாக, அனைத்து அரசு துறைகளையும் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அதையடுத்து ஒவ்வொரு அரசு துறைகளிலும் ஒவ்வொரு பதவியிலும் ஏற்பட்டுள்ள காலியிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. பிப்ரவரி மாதத்திற்குள் அடுத்த 2 ஆயிரம் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.
இதுவரை 2 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ள போதிலும் அதே பணியிடங்களிலும் தற்போது மேலும் காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, பதவி உயர்வு காரணமாக யூ.டி.சி., எல்.டி.சி., பதவிகளில் 300 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த அரசு பணியிடங்களும் இரண்டாம் சுற்று அறிவிப்பில் நிரப்பப்பட உள்ளது. எனவே அரசு வேலை கனவில் இருக்கும் பட்டதாரி இளைஞர்கள் அடுத்தடுத்த போட்டி தேர்வுக்கு இப்போதே தயாராவது நல்லது.
அரசு பணியிடங்களை பொருத்தவரை, கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு என்.ஆர்.காங்.,-பா.ஜ., கூட்டணி அரசின் தான் அனைத்து பணியிடங்களும் முழுவதுமாக நிரப்ப முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பதவி உயர்வு, கோர்ட் வழக்கு, நிர்வாக சிக்கல் என பல்வேறு காரணங்களால், மெதுவாக நிரப்பப்பட்டு வருகின்றது.
எனவே, தள்ளி போடப்படும் ஒவ்வொரு வேலைவாய்ப்பு அறிவிப்பும் வயது முதிர்ந்த பட்டதாரிகளுக்கு வாய்ப்பினை தட்டி பறித்து விடும் என்று அச்சமாக இருந்தனர். இச்சூழ்நிலையில் வெளியாக உள்ள இரண்டாம் சுற்று வேலை வாய்ப்பு அறிவிப்பு, வயது முதிர்வு நிலையில் இருக்கும் பட்டதாரிகள் மத்தியிலும் நம்பிக்கையை விதைத்துள்ளது.