/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் நிறுவன ஊழியரை தாக்கி பணம் பறிக்க முயன்ற 3 பேர் கைது
/
தனியார் நிறுவன ஊழியரை தாக்கி பணம் பறிக்க முயன்ற 3 பேர் கைது
தனியார் நிறுவன ஊழியரை தாக்கி பணம் பறிக்க முயன்ற 3 பேர் கைது
தனியார் நிறுவன ஊழியரை தாக்கி பணம் பறிக்க முயன்ற 3 பேர் கைது
ADDED : டிச 21, 2024 07:42 AM
பாகூர்: கேமரா டெக்னிஷியனை தாக்கி, பணம் பறிக்க முயன்ற மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
மதகடிப்பட்டு அடுத்த கலித்தீர்தாள்குப்பத்தை சேர்ந்தவர் சரண்ராஜ், 24; தனியார் நிறுவன கேமரா டெக்னிஷியன். இவர் நேற்று முன்தினம் பாகூர் அடுத்த சோரியாங்குப்பத்தில் உள்ள தனியார் மதுபான கடையில் கண்காணிப்பு கேமரா பொறுத்தி விட்டு நள்ளிரவு 1:30 மணியளவில் தனது பைக்கில் விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
சேலியமேடு ஓடை பாலம் அருகே சென்ற போது, அடையாளம் தெரியாத மூன்று பேர், சரண்ராஜை வழிமறித்து பணம் கேட்டனர். அவர் இல்லை என கூறியதால், அவரை தாக்கி, கூகுல் பே மூலம் பணத்தை அனுப்பு என கூறி, அவர் அணிந்திருந்த ஹெல்மெட்டை பிடுங்கிக் கொண்டு, மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து சரண்ராஜ் தனது நண்பருக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்தார்.
இதனிடையே, மூவரில் ஒருவர் சரண்ராஜின் பைக்கை எடுத்து கொண்டு, மற்ற இருவர் பிளஷர் ஸ்கூட்டரில் தப்பிச் செல்ல முயன்றனர். சரண்ராஜ், அவர்களை பிடித்து கீழே தள்ளியதால் ,பைக்கை விட்டு விட்டு, மூவரும் ஒரே ஸ்கூட்டரில் தப்பி சென்றனர். சம்பவ இடத்திற்கு வந்த சரண்ராஜின் நண்பர், அவரை மீட்டு, பாகூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.
அவர், அளித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில், சரண்ராஜை தாக்கியது, நத்தமேடு கிராமத்தை சேர்ந்த அருண் (எ) அருண்குமார் 19; மூலக்குளம் பிரதீஸ்வரன், 20; அரும்பார்த்தபுரம் ஹரி சந்தோஷ், 18; என்பது தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.