/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்காலில் போலி நகை அடகு வைத்த 3 பேர் கைது
/
காரைக்காலில் போலி நகை அடகு வைத்த 3 பேர் கைது
ADDED : ஏப் 28, 2025 04:27 AM
காரைக்கால்: காரைக்காலில் போலி நகை அடகு வைத்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால், குப்பை செட்டி தெரு பகுதியை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன்; திருநள்ளார் சாலையில் ஜி.ஆர்.எம்., என்ற பெயரில் நகை கடை மற்றும் நகை அடகு கடை வைத்துள்ளார்.
கடந்த 25ம் தேதி முன்று பேர் லட்சுமிநாராயணன் கடைக்கு வந்து ஒரு செயினை கொடுத்து அடகு வைத்து, ரூ.1.50 லட்சம் கேட்டனர்.
லட்சுமிநாராயணன் செயினை வாங்கி எடை பார்த்ததில் நகை 23,700 கிராம் இருந்தது.
செயினில் பி.ஐ.எஸ்., முத்திரை மற்றும் 916 ஹால் மார்க் முத்திரை இருந்தது.
நகையின் தன்மையை பார்க்கவேண்டி அவரது கடைக்கு எதிரில் உள்ள பாலா முருகன் நகை கடைக்கு எடுத்துச் சென்று கோல்ட் டெஸ்டிங் மிஷினில் வைத்து பார்த்தபோது தங்கத்தின் மதிப்பு குறைவாக காட்டியது.
இது குறித்து லட்சுமிநாராயணன் கொடுத்த புகாரின் பேரில், கடைக்கு வந்த மூவரையும் நகர இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையிலான போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அதில், கும்பகோணம், கல்லுார் உத்தமதாணி கிழக்கு தெருவை சேர்ந்த பரசுராமன், 36; காரைக்கால் நேரு நகர் சதீஷ்குமார், 38, காரைக்கால் சொக்க நாதர் கோவில் தெரு முருகவேல், 35, ஆகியோர் போலி நகையை கொடுத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இது குறித்து நகர போலீசார் வழக்குப் பதிந்து, பரசுராமன், சதீஷ்குமார், முருகவேல் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.