sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்ற 3 பேர் அதிரடி கைது

மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்ற 3 பேர் அதிரடி கைது

மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்ற 3 பேர் அதிரடி கைது


ADDED : டிச 06, 2024 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 06, 2024 04:45 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருபுவனை : திருபுவனையில் பள்ளி, கல்லுாரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருபுவனையில் செயல்படாமல் பூட்டிக்கிடக்கும் கூட்டுறவு நுாற்பாலை பின்புறம் கஞ்சா விற்பதாக வந்த தகவலன்பேரில் திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் குமரவேல் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.

அப்போது போலீசாரை கண்டது தப்பியோடிய 3 வாலிபர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்களை சோதனை செய்ததில் 160 கிராம் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மாவட்டம், பஞ்சாமாதேவி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகையன், 26; வி.அகரம் முருகன் கோவில் வீதியை சேர்ந்த சேகர் மகன் அரவிந்த், 28; கலிவரதன் மகன் கரண், 23, ஆகியோர் என, தெரிய வந்தது.

விசாரணையில் அவர்கள் பள்ளி, கல்லுாரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்றது தெரிய வந்தது. இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்து, கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us