ADDED : நவ 27, 2024 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரியில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
கோரிமேடு, போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி அருகில் இளைஞர்கள் சிலர் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பதாக, போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது இளைஞர்கள் போலீசாரை பார்த்த உடன், தப்பி ஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள, 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், அவர்கள் புதுச்சேரியை சேர்ந்த தனுஷ், 20; சின்னையன்பேட்டை கார்த்திக் ராஜ், 19; செயின்ட் பால்பேட் கவுதம், 30 ஆகியோர் என தெரிந்தது. மூவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.