sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைது

/

கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைது

கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைது

கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைது


ADDED : மார் 20, 2024 05:02 AM

Google News

ADDED : மார் 20, 2024 05:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருபுவனை : மதகடிப்பட்டு அருகே கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி மதகடிப்பட்டு - திருக்கனுார் சாலையில் கலிதீர்த்தாள்குப்பம் அரசு கல்லுாரி எதிரே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், திருபுவனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, மாணவர்களுக்கு கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்துகொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் 3 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் அவர்கள் கண்டமங்கலத்தை சேர்ந்த பரணி, 21; முத்துவேல் 20; மற்றும் சென்னையை சேர்ந்த ராகவேந்திரன், 21; என்பது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, மூவரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பெரியகாலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us