/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
/
லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
ADDED : அக் 16, 2025 11:32 PM
புதுச்சேரி: புதிய பஸ் நிலையம் அருகே தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
உருளையன்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
மறைமலையடிகள் சாலை, புதிய பஸ் நிலையம் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த நபர்களை பிடித்து சோதனை செய்தனர்.
அவர்கள், தடை செய்யப்பட்ட கேரளா மாநிலத்தை சேர்ந்த மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
விசாரணையில், முத்தியால்பேட்டை, லுார்து நகரைச் சேர்ந்த சரவணன், 47; சாரம், சக்தி நகர் மணிகண்டன், 35; குயவர் பாளையம், நாயக்கர் தோப்பு விக்னேஷ், 31; ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும், தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டு மூன்று இலக்க எண்களை, உண்மையான லாட்டரி சீட்டுகள் என, 30 ரூபாய்க்கு பொதுமக்களிடம் வாட்ஸ் அப் மூலம் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 5 மொபைல் போன்கள், ரூ.10 ஆயிரம் பணம், மூன்று இலக்க லாட்டரி சீட்டு ஆகியவை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.