/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ. 5.10 கோடி மோசடி வழக்கில் 3 பேர் கைது
/
ரூ. 5.10 கோடி மோசடி வழக்கில் 3 பேர் கைது
ADDED : ஏப் 14, 2025 04:19 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ. 5.10 கோடி மோசடி செய்த வழக்கில், கேரளாவை சேர்ந்த 3 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தின்மேலாளர்சுகியா என்பவருக்கு, கடந்த மார்ச் 25ம் தேதி, அவரது நிறுவன உரிமையாளர் போலமர்ம நபர் வாட்ஸ் ஆப் மூலம் குறுச்செய்தி அனுப்பினார்.
அதில் நிறுவனத்தின் பணிகளுக்காக குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் ரூ. 5.10 கோடி செலுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை உண்மை என நம்பிய சுகியா அந்த வங்கி கணக்கிற்கு 5 தவணைகளாக ரூ.5.10 கோடி அனுப்பினார்.
அதன் பிறகு உரிமையாளரைத் தொடர்பு கொண்டு பேசியபோது, மர்ம நபர் மோசடியாக பணத்தை அனுப்பக் கூறியது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த சுகியா இது குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, தியாகராஜன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மோசடி நபர்களை தேடி வந்தனர். இதில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மொபிகுல் ஆலம் முலா, 35; நசிபுல் இஸ்லாம், 34; ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் கேரள மாநிலம், வட்டப்பாறையை சேர்ந்த அஜித், 30; மலப்புரத்தைச் சேர்ந்த சஷீல் சகத், 23; நபீ, 18; ஆகிய 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிபடை போலீசார் கேரளா சென்று, திருவனந்தபுரத்தில் பதுங்கி இருந்த 3 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
விசாரணையில், 30க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை துவங்கி, இணைய தளம் மூலம் மோசடி செய்யும் பணத்தை அந்த வங்கி கணக்குகளுக்கு மாற்றியது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

