/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உணவு டெலிவரி ஊழியரை தாக்கிய 3 சிறுவர்கள் கைது
/
உணவு டெலிவரி ஊழியரை தாக்கிய 3 சிறுவர்கள் கைது
ADDED : அக் 06, 2025 01:44 AM
புதுச்சேரி: உணவு டெலிவரி ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
கடலுார், திருவந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜய் பிரியன், 33; புதுச்சேரி சேதராப்பட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்கிறார். இவர் வேலை செய்யும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில், உணவு டெலிவரி செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு பீட்சா டெலிவரி செய்வதற்காக, முத்தியால்பேட்டை சோலை நகர், கண்ண தாசன் வீதி, புத்து மாரியம்மன் கோவில் சந்திப்புக்கு சென்றார். அங்கிருந்த மூன்று சிறுவர்கள் விஜய்பிரியனை தாக்கி, அவரிடம் இருந்த பீட்சாவை பிடுங்கி கொண்டு, அவரது பைக்கை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.
இதுகுறித்து விஜய்பிரியன் முத்தியால்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து மூன்று சிறுவர்களையும் கைது செய்து, சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைத்தனர்.